Enable Javscript for better performance
வியாபாரிகள் வராததால் வெறிச்சோடியது ஜவுளிச் சந்தை- Dinamani

சுடச்சுட

    

    வியாபாரிகள் வராததால் வெறிச்சோடியது ஜவுளிச் சந்தை

    By ஈரோடு  |   Published on : 28th January 2015 05:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஈரோடு, ஜன. 27: வியாபாரிகள் வராததால் ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளிச் சந்தை செவ்வாய்க்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டது.

     தென்னிந்தியாவிலேயே புகழ்பெற்ற ஜவுளிச் சந்தை ஈரோடு நகரில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெற்று வருகிறது. கனி மார்க்கெட், அசோகபுரம், சென்ட்ரல்

    திரையரங்க வளாகம், கங்காபுரம் டெக்ஸ்வேலி வணிக வளாகம் ஆகியவற்றில் ஜவுளிச் சந்தை நடைபெறுகிறது.

     கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் உற்பத்தியாகும் ஆயத்த ஆடைகள், போர்வைகள்,

    துண்டுகள், சேலைகள், சுடிதார் துணிகள், பனியன் ஆடைகள், திரைச் சீலைகள் உள்ளிட்ட அனைத்து ஜவுளி ரகங்களில் 70 சதவீதம் ஈரோடு ஜவுளிச் சந்தை மூலமாகத்தான்

    விற்பனையாகின்றன.

     இவற்றைக் கொள்முதல் செய்ய கேரளம், ஆந்திரம், மகாராஷ்டிரம், கர்நாடகம், புதுவை மற்றும் தமிழகம் முழுவதிலும் இருந்து மொத்த வியாபாரிகள், சிறு வியாபாரிகள்

    வந்து செல்வது வழக்கம்.

     தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைக் காலங்கள் முடிவடைந்த நிலையில் ஜவுளிச் சந்தை தொடர்ந்து களையிழந்துள்ளது. கேரளம், ஆந்திரம்,

    கர்நாடக மாநிலங்களில் இருந்து ஓரளவு வியாபாரிகள் வந்து சென்றனர்.

     இந்நிலையில், கேரளத்தில் பேருந்து நிறுத்தம் காரணமாக ஜவுளிச் சந்தைக்கு செவ்வாய்க்கிழமை வியாபாரிகள் வரவில்லை.

     அதேபோல, சிறு வியாபாரிகள் வரத்தும் குறைந்துவிட்டதால் ஜவுளிச் சந்தை செவ்வாய்க்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai