Enable Javscript for better performance
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகைப் பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஈரோடு, ஜன. 27: வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மர்ம நபர் நகையை பறித்துச் சென்றார்.

     ஈரோடு பழையபாளையம் அருகே, செல்வம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (40). ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது

    மனைவி தேவிமாரி (34).

     இவர், செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் தனியாக இருந்தபோது, அவரது வீட்டுக்கு வந்த இளைஞர் ஒருவர், தான் ரமேஷின் நண்பர் என்றும், தனது திருமணப்

    பத்திரிகையை கொடுக்க வந்திருப்பதாகவும் அறிமுகம் செய்துகொண்டாராம்.

     அதை நம்பிய தேவிமாரி அவரை வீட்டுக்குள் அழைத்து உட்கார வைத்துவிட்டு, தண்ணீர் எடுத்து வர சமையல் அறைக்குச் சென்றாராம். அப்போது அவரது பின்னாலேயே

    சென்ற அந்த நபர், தேவிமாரியின் முதுகில் தாக்கி, வாயில் துணியை வைத்து அடைத்து, அவர் அணிந்திருந்த பதினொன்றரை சவரன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பி

    ஓடிவிட்டாராம்.  இதுகுறித்து, ரமேஷ் அளித்த புகாரின் பேரில் சூரம்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai