Enable Javscript for better performance
வெள்ளக்கோவில் ஒன்றிய பள்ளிக் கல்வி அறக்கட்டளைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வெள்ளக்கோவில் ஒன்றிய பள்ளிக் கல்வி அறக்கட்டளை பொதுக்குழுக் கூட்டம்,மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

     அறக்கட்டளைத் தலைவர் எம்.வி.சண்முகராஜ் தலைமை வகித்தார்.

      அறக்கட்டளை புரவலர்கள் ஜவஹர், ஆசிரியர்கள் பாபு, பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் ப.மணிமொழி வரவேற்றார்.

     கடந்த 3 ஆண்டுகளாக அறக்கட்டளை சார்பில் ஒன்றியத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளிகளுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இதன்

    வரவு-செலவு கணக்கு, சேவைத் திட்டங்கள், தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    கடந்தாண்டு சிறப்பாகச் செயல்பட்ட உத்தமபாளையம், டி.ஆர். நகர் அரசு மேல்நிலைப் பள்ளிகள் கூட்டத்தில் கெளரவிக்கப்பட்டன. இதில் 50-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி

    தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர். அறக்கட்டளைப் பொருளாளர் என்.தண்டபாணி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்கள்  உள்பட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai