சுடச்சுட

  

  கனரா வங்கியின் தொழில் பயிற்சி நிலையம் சார்பில், இலவச காளான் வளர்ப்பு பயிற்சி வகுப்பு ஜூலை 20 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

  ஈரோடு, அசோகபுரம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா சிறுவர் பள்ளி வளாகத்தில், மத்திய அரசின் கிராமப்புற அமைச்சக வழிகாட்டுதலின் படி, கனரா வங்கி தொழில் பயிற்சி நிலையம் மூலமாக இப்பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.

  இப்பயிற்சியில் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், சுய உதவி குழுக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். பயிற்சி பெற தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை.

  பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு பயிற்சி நிலைய அலுவலகத்தை 0424 - 2290338 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என கனரா வங்கியின் முதுநிலை மேலாளர் பூபாலன் தெரிவித்துள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai