கொமதேக 72 தொகுதிகளில் தனித்துப் போட்டி: 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியீடு

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (கொமதேக) 72 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. முதல்கட்டமாக 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (கொமதேக) 72 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. முதல்கட்டமாக 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

 ஈரோட்டில் இக்கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாநிலப் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமை வகித்தார். மாநில அவைத் தலைவர் பி.ஆர்.டி.சென்னியப்பன், கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவை மாநிலத் தலைவர் தேவராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

 கொங்கு மண்டலத்தின் பிரதான பிரச்னைகளுக்கு அரசியல் ரீதியாக தீர்வுகாணும் வகையில்தான் கொமதேக கட்சி உதயமானது. இப்பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில்தான் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருப்பினும், எந்த கட்சியும் கொங்கு மண்டல மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகத் தெரியவில்லை. எனவே, கொமதகே தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது.

 ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் எங்கள் வாக்கு வங்கி அதிகமாக உள்ள 72 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம். முதல்கட்டமாக 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்னும் ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படும் என்றார்.

வேட்பாளர்கள் விவரம்

 பொள்ளாச்சி-நித்தியானந்தம், சூலூர்-பிரிமியர் செல்வம், கவுண்டம்பாளையம்-குழந்தைவேல், கோவை வடக்கு-பிரேம்குமார், தொண்டாமுத்தூர்-வைரவேல், கிணத்துக்கடவு-செல்வக்குமார், திருப்பூர் வடக்கு-ரோபோ ரவி, திருப்பூர் தெற்கு-வேலுமணி, உடுமலை-ரகுபதி ராகவன், மடத்துக்குளம்-குமரகுருபரன், ஈரோடு கிழக்கு-ஜெகநாதன், ஈரோடு மேற்கு-ஈஸ்வரமூர்த்தி, மொடக்குறிச்சி-சூரியமூர்த்தி, பெருந்துறை-கே.கே.சி.பாலு, அந்தியூர்-துரைராஜா, கோபி-சிவராஜ், நாமக்கல்-மாதேஸ்வரன், திருச்செங்கோடு-ராஜவேல், அரவக்குறிச்சி-சக்திகோச் நடராஜ், கரூர்-விசா.சண்முகம், ஒட்டன்சத்திரம்-அருள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com