Enable Javscript for better performance
அம்பேத்கர் பிறந்த நாள் விழா- Dinamani

சுடச்சுட

    

    பெருந்துறையில்...

    அம்பேத்கர் 125-ஆவது பிறந்ததினத்தையொட்டி, அவரது உருவப் படத்துக்கு பெருந்துறையில் உள்ள அதிமுக ஈரோடு புறநகர் மாவட்ட அலுவலகத்தில் வியாழக்கிழமை மலர்த் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    ஈரோடு புறநகர் மாவட்டச் செயலாளரும், சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், அம்பேத்கர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்தும், மலர்த் தூவியும் மரியாதை செலுத்தினார். பின்னர், இனிப்பு வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், பெருந்துறை தொகுதி செயலாளர் திங்களூர் சு.கந்தசாமி, ஒன்றியச் செயலாளர் விஜயன், பெருந்துறை ஒன்றியக் குழுத் தலைவர் எஸ்.பெரியசாமி, மாவட்ட அவைத் தலைவர் சந்திரசேகரன், பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனைச் சங்கத் தலைவர் அருள்ஜோதி செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஈரோட்டில்...

    ஈரோட்டில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் அம்பேத்கரின் 126-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

    ஈரோடு மத்திய மாவட்ட தமாகா தலைவர் விஜயகுமார் தலைமையில் கட்சி அலுவலகத்தில் அம்பேத்கர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர், ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் சி.எஸ்.கெளதமன், எஸ்.சி., எஸ்.டி. பிரிவுத் தலைவர் கண்ணம்மாள் உள்பட பலர் பங்கேற்றனர்.

    காங்கிரஸ் சார்பில்...

    ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட எஸ்.டி., எஸ்.டி. பிரிவுத் தலைவர் கே.பி.சின்னசாமி தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர்  ஈ.பி.ரவி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அம்பேத்கர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி புவனேஸ்வரி, மாநகர் மாவட்ட சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவர் கே.என்.பாஷா உள்பட பலர் பங்கேற்றனர்.

    அதேபோல, ஆதித்தமிழர் கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில் ஈரோடு மாநகரம், கோபி, சென்னிமலை, ஈரோடு ஒன்றிய பகுதிகளிலும் அம்பேத்கர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    பவானி, அந்தியூரில்...

    பவானி புதிய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் அம்பேத்கரின் உருவப் படத்துக்கு ஈரோடு மாவட்டச் செயலர் பி.பி.பழனிச்சாமி தலைமையில் மலர்த் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பவானி வட்டச் செயலர் பி.மாதையன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி சார்பில் அந்தியூர் பிரிவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலர் சிறுத்தை வள்ளுவன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், அலங்கரிக்கப்பட்ட அம்பேத்கரின் உருவப் படத்துக்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில், தேமுதிக நகரச் செயலர் அண்ணாமலை, மதிமுக நகரச் செயலர் அறிவழகன், தமாகா வட்டாரத் தலைவர் கோவிந்தராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் கந்தசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டச் செயலர் எஸ்.மாணிக்கம், விடுதலைச் சிறுத்தைகள் நகரச் செயலாளர் நாகராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai