Enable Javscript for better performance
ஈரோடு மாவட்ட தேமுதிக வேட்பாளர்கள்- Dinamani

சுடச்சுட

    

    ஈரோடு கிழக்கு: பொன்.சேர்மன்

    ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி தேமுதிக வேட்பாளராக பொன்.சேர்மன் (62) அறிவிக்கப்பட்டுள்ளார்.

    ஈரோடு தெற்கு மாவட்ட அவைத் தலைவராக 2006-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இவர், 1962 முதல் திமுக உறுப்பினராக இருந்தார். 2006 சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் ஈரோடு வேட்பாளராக போட்டியிட்டார். தேர்தலுக்குப் பின்னர் சில மாதங்களில் தேமுதிகவில் இணைந்தார்.

    இடையன்காட்டுவலசில் வசித்து வரும் இவர், ஈரோடு-பெருந்துறை சாலையில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு புஷ்பா என்ற மனைவி உள்ளார். மகன் சிவராஜ் எம்.பி.ஏ. படித்துவிட்டு, பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மகள் இந்திரா எம்.சி.ஏ. படித்துள்ளார்.

     

    அந்தியூர்: எம்.கே.ராஜா சம்பத்

    பவானி, ஏப். 14: அந்தியூர் சட்டப் பேரவைத் தொகுதி தேமுதிக வேட்பாளராக எம்.கே.ராஜா சம்பத் (51) அறிவிக்கப்பட்டுள்ளார்.

    அந்தியூர், தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் எம்.கே.ராஜா சம்பத். பி.ஏ. படித்துள்ளார். கொங்கு வேளாளக் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர்.

    இவரது தந்தை எம்.கருப்ப கவுண்டர். இவருக்கு ஆ.யுகாதேவி என்ற மனைவியும், கே.ஆர்.கெளதம் என்ற மகனும் உள்ளனர். விவசாயத் தொழில் செய்து வருகிறார்.  2005-இல் கட்சியின் மாவட்டப் பிரதிநிதி, 2006-ஆம் ஆண்டு முதல் அந்தியூர் ஒன்றியச் செயலராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

     

    மொடக்குறிச்சி: ரமேஷ்

    மொடக்குறிச்சி, ஏப். 14:  மொடக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி தேமுதிக வேட்பாளராக ஆ. ரமேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    கொடுமுடி அருகே உள்ள பனப்பாளையம் பகுதியை சேர்ந்த ஆ.ரமேஷ் (36), எம்.பி.ஏ வரை படித்துள்ளார். இவர், தேமுதிக உதயமானது முதல் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றி வருகிறார்.

     கொடுமுடி ஒன்றிய துணைச் செயலாளராகவும், ஒன்றியத் தலைவராகவும், ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்ட தொழிற்சங்க பொருளாளராகவும் பணியாற்றி உள்ளார். தற்போது ஈரோடு தெற்கு மாவட்ட  துணைச் செயலாளராக உள்ளார். கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தை சேர்ந்த இவர், விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட்  தொழில் செய்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும் ஷிவானி என்ற மகளும் உள்ளனர்.

     

    பவானி: பா.கோபால்

    பவானி, ஏப். 14: பவானி சட்டப் பேரவைத் தொகுதி தேமுதிக வேட்பாளராக பா.கோபால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    கவுந்தப்பாடி, மணியம்பாளையத்தை சேர்ந்தவர் பா.கோபால். இவரது தந்தை பாவண கவுண்டர். 44 வயதான இவர், பிளஸ் 2 வரை படித்துள்ளார். கொங்கு வேளாளக் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர். விவசாயத் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சவிதா என்ற மனைவியும், சுருதி என்ற மகளும், அஜய் விக்ரம் என்ற மகனும் உள்ளனர். 

    இவர், பவானி தொகுதிப் பொறுப்பாளர், மாவட்ட இளைஞர் அணி செயலர், ஈரோடு தெற்கு மாவட்ட துணைச் செயலர் ஆகிய பொறுப்புகளில் இருந்துள்ளார். தற்போது ஈரோடு தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக உள்ளார். இவர் ஏற்கெனவே 2006 சட்டப் பேரவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai