Enable Javscript for better performance
சர்க்கரை வியாபாரியிடம் ரூ. 5 லட்சம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    ஈரோட்டில் உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் சர்க்கரை வியாபாரி கொண்டு வந்த ரூ. 5 லட்சம் ரொக்கம் தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

     சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படை, நிலைக் கண்காணிப்பு குழுவினர் 24 மணி நேரமும் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

     இந்நிலையில், ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் நிலைக் கண்காணிப்புக் குழுவினர் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

     அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, வாகனத்தில் வந்தவரிடம் ரூ. 5 லட்சம் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர், ஆர்.என்.புதூர், தண்ணீர்பந்தல்பாளையம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (55) என்பதும், நாட்டுச் சர்க்கரை வியாபாரியான அவர் சர்க்கரை விற்ற பணத்தை வீட்டுக்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார்.  ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை எனத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து ரூ. 5 லட்சத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை ஒப்படைத்து விட்டு பணத்தை பெற்றுச் செல்லலாம் என குணசேகரனிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai