Enable Javscript for better performance
சிறுவலூரில் கருப்பட்டி ஏலம்  - Dinamani

சுடச்சுட

    

    கோபி அருகே சிறுவலூர், பதிப்பாளையம் கருப்பட்டி உற்பத்தியாளர் சங்கத்தில் பனங்கருப்பட்டி மற்றும் தென்னங்கருப்பட்டி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

    ஏலத்துக்கு, பனங்கருப்பட்டி, 3,000 கிலோவும், தென்னங்கருப்பட்டி, 250 கிலோவும் கொண்டு வரப்பட்டன. தென்னங்கருப்பட்டி கிலோ ரூ. 74-க்கும், பனங்கருப்பட்டி, ரூ. 83.60-க்கும் விற்பனையானது. சீசன் இல்லாததால், தென்னங்கருப்பட்டி வரத்து குறைவாகவே இருந்தது.

    இந்த ஏலத்தில் சிறுவலூர், கரிச்சிபாளையம், ஆயிபாளையம், பட்டக்காரர்காடு, மணியக்காரன்புதூர், நரியப்பள்ளம், குழியங்காடு, மீன்கிணறு உள்ளிட்ட பகுதியை சேர்ந்த கருப்பட்டி உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai