Enable Javscript for better performance
தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு பூஜை- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி, ஈரோடு மாநகரில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன. 

    தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் விஷுக்கனி காணல் என்ற சம்பிரதாயத்தை பொதுமக்கள் பின்பற்றி வருகின்றனர்.

    இதையொட்டி வியாழக்கிழமை அதிகாலை நகை, பணம் மற்றும் பழங்களில் பொதுமக்கள் கண் விழித்தனர். தெய்வத்தையும், பூஜைக்கு வைத்த மங்கலப் பொருள்களையும் தரிசித்தனர்.

    தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, ஈரோடு திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மற்றும் பெரிய மாரியம்மன் கோயிலில் விசேஷ அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே கோயில்களில் திரண்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    அதேபோல், கோட்டை ஈஸ்வரன் கோயில், பெருமாள் கோயில்,  வ.உ.சி. பூங்காவில் உள்ள ஆஞ்சநேயர் கோயில், வெட்டுக்காட்டு வலசு சைவமாரியம்மன் கோயில், சூரம்பட்டி வலம்புரி செல்வ விநாயகர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    சத்தியமங்கலத்தில்...

    தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு. சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி அம்மன் கோயில், ஸ்ரீ தண்டுமாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    சென்னிமலையில்...

    சென்னிமலை முருகன் கோயிலில் வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு முதலில் கோமாதா பூஜை நடைபெற்றது. பின்னர், மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவையொட்டி, முருகப் பெருமான் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai