Enable Javscript for better performance
தாளவாடியில் சூறைக்காற்று: வீடுகளின் மேற்கூரை சேதம்- Dinamani

சுடச்சுட

    

    தாளவாடியில் சூறைக்காற்று: வீடுகளின் மேற்கூரை சேதம்

    By சத்தியமங்கலம்  |   Published on : 15th April 2016 04:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தாளவாடியில் வீசிய சூறைக்காற்றால் 10-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன. மேலும், நர்சரியில் இருந்த 2 லட்சம் நாற்றுகள் சேதமடைந்தன.

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி மலைப்பகுதி குமிட்டாபுரம், சிக்கள்ளி, ஓசூர் ஆகிய பகுதியில் வியாழக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் மழை பெய்தது. பலத்த காற்றால் குமிட்டாபுரம் சந்திரப்பா, வீரண்ணா, சந்திரப்பா, நாகராஜ், மாதேவப்பா ஆகியோர் வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன. இதில், சந்திராப்பா காயமடைந்தார். அதே பகுதியில் ரவி என்பவரின் நர்சரியில் வளர்க்கப்பட்ட 2 லட்சம் நாற்றுகள் காற்றில் சாய்ந்து சேதமடைந்தன. மேலும், குமிட்டாபுரம் சாலையோரத்தில் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai