Enable Javscript for better performance
தேர்தல் விதிமீறல்: அதிமுக ஆலோசனைக் கூட்டம்: மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை- Dinamani

சுடச்சுட

    

    தேர்தல் விதிமீறல்: அதிமுக ஆலோசனைக் கூட்டம்: மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

    By ஈரோடு  |   Published on : 15th April 2016 04:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்தல் விதிமுறையை மீறி ஈரோடு மாநகராட்சி சமுதாயக் கூடத்தில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடத்த அனுமதி அளித்ததற்காக மாநகராட்சி இளநிலைப் பொறியாளர்கள் 2 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

    ஈரோடு மாநகராட்சி 45-ஆவது வார்டுக்கு உள்பட்ட புதுமைக் காலனியில் மாநகராட்சி சமுதாயக் கூடம் உள்ளது. இங்கு 2 தினங்களுக்கு முன்பு அதிமுக சார்பில்  பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. பெரியார் நகர் பகுதி செயலாளரும், 3-ஆவது மண்டலத் தலைவருமான மனோகரன் கலந்து கொண்டார்.

    தேர்தல் அறிவிப்பு வெளியான பின்னர் அரசுக் கட்டடங்களில் கட்சிக் கூட்டங்களை நடத்தக் கூடாது, அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்த வேண்டும் எனில் முறையான அனுமதி பெற வேண்டும் என்ற தேர்தல் விதிமுறை அமலில் உள்ளது. ஆனால், விதிமுறைகளை கண்டு கொள்ளாமல் சமுதாயக் கூடத்தில் பூத் கமிட்டி கூட்டம் நடத்த அனுமதி அளித்ததாகப் புகார் எழுந்தது.

    அதன்பேரில், கூட்டம் நடத்த அனுமதி அளித்த மாநகராட்சி இளநிலை பொறியாளர்கள் 2 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai