Enable Javscript for better performance
தேர்தல் விதிமீறல்: மொடக்குறிச்சி கொமதேக வேட்பாளர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    தேர்தல் விதிமீறல்: மொடக்குறிச்சி கொமதேக வேட்பாளர் மீது வழக்கு

    By மொடக்குறிச்சி  |   Published on : 15th April 2016 04:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்தல் விதியை மீறியதாக மொடக்குறிச்சி தொகுதி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் சூரியமூர்த்தி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

    கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மொடக்குறிச்சி தொகுதி வேட்பாளர் சூரியமூர்த்தி, கட்சி நிர்வாகிகள் விளாங்காட்டுவலசு சுரேஷ், கொடுமுடி ஒன்றியச் செயலாளர் சண்முகம், ஈரோடு மாவட்டச் செயலாளர் சுரேஷ்பொன்வேல், கணபதிபாளையம் கார்மேகம், வெந்தபாளையம் கொங்கு செந்தில், கிளாம்பாடி கவின்குமார் உள்ளிட்டோர் நான்கு சக்கர வாகனத்தில் சென்று அறச்சலூர் அருகே உள்ள ஓடாநிலை தீரன்சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து, மணி மண்டபம் பகுதியில் பட்டாசு வெடித்து சென்றதாக அறச்சலூர் சி.கிராம நிர்வாக அலுவலர் மஞ்சமாதா அளித்த புகாரின்பேரில் அறச்சலூர் காவல் ஆய்வாளர் ஞானப்பிரகாசம் வழக்கு பதிவு செய்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai