Enable Javscript for better performance
நட்டாற்றீஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    நட்டாற்றீஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழா

    By மொடக்குறிச்சி  |   Published on : 15th April 2016 04:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மொடக்குறிச்சி அருகே காங்கயம்பாளையத்தில் நட்டாற்றீஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

    காவிரியாற்றின் நடுவே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற இக்கோயில் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் 1-ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை காலை 5 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. தொடர்ந்து, பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    இதைத் தொடர்ந்து விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் கம்பங்கூழ் வழங்கப்பட்டது.

    இந்த விழாவில், ஈரோடு, கோவை, சேலம், திருச்செங்கோடு, உடுமலை, நாமக்கல் வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து வந்த பக்தர்கள் காவிரியாற்றின் மறுகரையான பட்லூரிலிருந்து பரிசல்கள் மூலம் கோயிலுக்கு வந்து நட்டாற்றீஸ்வரரை தரிசனம் செய்தனர். சுமார் 50 ஆயிரம் பொதுமக்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீநட்டாற்றீஸ்வரர் கோவில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர். ஈரோட்டிலிருந்து கோயிலுக்கு, அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

    மொடக்குறிச்சி காவல் ஆய்வாளர் லட்சுமணன் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai