Enable Javscript for better performance
பெருந்துறை அருகே ரூ. 1.23 லட்சம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    பெருந்துறை அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப் பட்ட ரூ. 1.23 லட்சம் ரொக்கம் வியாழக்கிழமை தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

    பெருந்துறை, திங்களூர் வீரமாத்தியம்மன் கோயில் அருகே நிலைக் கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த கந்தசாமி, உதவி ஆய்வாளர் பழனிசாமி உள்ளிட்டோர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

      மேலும் வாகனத்தில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர், வெள்ளோடு, காமராஜர் நகரைச் சேர்ந்த சென்னியப்பன் மகன் ரஞ்சித்குமார் என்பதும், அவரிடம் ரூ. 1 லட்சத்து 23 ஆயிரத்து 450 இருந்ததும் தெரிய வந்தது. ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அத்தொகையை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து பெருந்துறை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் டி.சுப்ரமணியத்திடம் ஒப்படைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai