Enable Javscript for better performance
யாருக்கு ஓட்டு?- Dinamani

சுடச்சுட

    

    சமூக ஒற்றுமை, எளிமை, அரசியலில் நேர்மையுடன் கூடிய வேட்பாளராக இருக்க வேண்டும். வறுமை ஒழிப்பு மற்றும் சிறுபான்மையினர் நலன் உள்ளிட்ட நலத் திட்டங்களை அறிவிக்கும் கட்சிக்கு எனது வாக்கு.

    அர்ஷத் அஹமத்.

    கல்லூரி மாணவர், சத்தியமங்கலம்

     

    ஊழல் ஒழிப்பு, வேலைவாய்ப்பு, நேர்மையான அதிகாரிகளை அரவணைத்து செல்லுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கட்சிக்கே எனது வாக்கு.

    ஏ.பிரவீன்.

    வாணிப்புத்தூர்,

    டி.என்.பாளையம்.

     

    மருத்துவ காப்பீட்டு திட்டம், விவசாய கடன் தள்ளுபடி, பண்ணை குட்டைகள் அமைத்தது, திருமண நிதியுதவித் திட்டம், முதியோர் ஓய்வூதியம் என திமுக ஆட்சியில் ஏராளமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. எனவே, எனது வாக்கு திமுகவுக்கே.

    பி.கே.சேகர். விவசாயி,

    பெரியகள்ளிபட்டி, பவானிசாகர்.

     

    அரசு அலுவலகங்களில் லஞ்சம், ஊழல் இல்லாமல் வெளிப்படையான நிர்வாகத்தை செயல்படுத்தக் கூடிய வகையில் அரசு அமைய வேண்டும். மக்களுக்கு உண்மையாக  உழைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட வேட்பாளருக்கே எனது ஓட்டு.

    கார்த்திகேயன். தனியார் நிறுவன

    ஊழியர், புன்செய் புளியம்பட்டி

     

    தமிழகத்தில் அண்மைக்காலமாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போதிய வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரவில்லை. படித்த பெண்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி, வாழ்வாதாரத்தை உயர்த்தும்

    கட்சிக்கே எனது வாக்கு.

    இந்திராதேவி(18),

    கல்லூரி மாணவி, டி.என்.பாளையம்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai