Enable Javscript for better performance
அகில இந்திய யோகா போட்டி: ஸ்ரீ வெங்கடேஷ்வரா பள்ளி சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    அகில இந்திய யோகா போட்டி: ஸ்ரீ வெங்கடேஷ்வரா பள்ளி சிறப்பிடம்

    By DIN  |   Published on : 28th November 2016 06:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அகில இந்திய யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்ரீ வெங்கடேஷ்வரா இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.
     அகில இந்திய யோகா கலாசாரக் கூட்டமைப்பு சார்பில், சென்னையில் உள்ள எஸ்.கே.ஆர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இப்போட்டியில் ஸ்ரீ  வெங்கடேஸ்வரா பள்ளி மாணவர்கள் 25-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
     இதில், 4-ஆம் வகுப்பைச் சேர்ந்த அக்க்ஷயா, அனுஷியா பொது ஆசன பிரிவில் தலா  ஒரு தங்கமும், ஆர்டிஸ்டிக் பிரிவில் தலா ஒரு தங்கமும், சாம்பியன் பட்டதையும் வென்றனர். இதே பள்ளியைச் சேர்ந்த சங்கரி, திருநாவுக்கரசு, எஸ்.டி.பரத், செல்வகணபதி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் பிரதாப்சாகர் ஆகியோர் தங்கம் வென்றனர்.
     சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவர்கள் சக்தி சாஸ்தவன், பிரியமாலா, எஸ்.டி.பரத், தீனத், கிஷோர் ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தையும், கவிவர்ஷன், ஹரிவிஷ்ணு, கே.கே.பரத், தர்ஷினிபிரியா, கிரன்ஜீதன், ஆதவன் ஆகியோர் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.
     போட்டியில் சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவர்கள் 6 தங்கப் பதக்கம், 12 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கத்தைப் பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர்.
     வெங்கடேஸ்வரா இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளி அணி 10 முதல் 19 வயதுக்கான போட்டியில் 24 தங்கம், 26 வெள்ளி, 9 வெண்கலப் பதக்கம் உள்பட 59 பதக்கங்களைப் பெற்று வெற்றி பெற்றது.
     வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா கல்வி குழுமத் தலைவரும், சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான கே.சி.கருப்பணன் கோப்பைகள், பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.
     பள்ளிச் செயலாளர் ஜி.பி.கெட்டிமுத்து, இயக்குநர்கள் கே.சி.கணேசன், வெங்கடாசலம், ஜோதிலிங்கம், செந்தில் ஆகியோரும் மாணவ, மாணவிகளை வாழ்த்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai