Enable Javscript for better performance
அவல்பூந்துறையில்  கழிப்பறைகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    அவல்பூந்துறையில்  கழிப்பறைகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தொடக்கம்

    By DIN  |   Published on : 28th November 2016 07:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மொடக்குறிச்சி தாலுகா, அவல்பூந்துறை நால்ரோட்டில் கழிப்பறைகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடங்கியது.
     ஈரோடு காங்கயம் செல்லும் சாலையில் அமைந்துள்ள அவல்பூந்துறை நால்ரோட்டில் பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகள் கழிப்பறை வசதியின்றி மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து, பேருந்து நிலையம், கழிப்பறை கட்டித் தரக் கோரி எம்.எல்.ஏ, எம்.பி. ஆகியோரிடம் பொதுமக்கள் நீண்டநாளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
     தற்போது, பொதுமக்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு அவல்பூந்துறை நால்ரோட்டில் கழிப்பறைகளுடன் கூடிய பயணிகள் நிழற்குடை அமைக்க மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 10 லட்சம் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
     இந்நிகழ்ச்சிக்கு, அதிமுக ஒன்றியச் செயலாளர் கதிர்வேல் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் அசோக்குமார் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஈரோடு தொகுதி எம்.பி. எஸ்.செல்வக்குமாரசின்னையன், மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி ஆகியோர் பூமிபூஜை செய்து பணிகளைத் தொடங்கி வைத்தனர்.
     இதில், முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் கணபதி, முன்னாள் யூனியன் கவுன்சிலர் மணி (எ) சண்முகம், முன்னாள் அவல்பூந்துறை பேரூராட்சித் தலைவர் பிரணவவர்மன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai