Enable Javscript for better performance
ஈரோடு மார்க்கமாக சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்காக சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப- Dinamani

சுடச்சுட

    

    ஈரோடு மார்க்கமாக சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்காக சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

    By DIN  |   Published on : 28th November 2016 06:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஈரோடு மார்க்கமாக சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
     கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரி மலைக்குச் செல்வது வழக்கம். சிலர் கார், வேன், பேருந்து மூலமாக எண்ணிக்கைக்கு தகுந்தாவாறு சென்று வருவார்கள். சில பக்தர்கள் ரயில்களில் செல்வது வழக்கம்.
     அவ்வாறு இந்த ஆண்டு ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்குச் செல்வதற்கு வசதியாக தென்னக ரயில்வே சுவிதா விரைவு ரயிலை சென்னையில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு இயக்குகிறது. இந்த ரயிலால் ஐயப்ப பக்தர்கள் கூட்ட நெரிசல் இன்றி சபரிமலைக்குச் சென்று வர முடியும்.
     இந்த ரயில்கள் டிசம்பர்
    2, 9-ஆம் தேதிகளில் காலை 4.20 மணிக்கு ஈரோடு வருகிறது. திருப்பூர், கோவை, பாலக்காடு மார்க்கமாக கேரள மாநிலம், கொல்லம் செல்கிறது.
    அதேபோல, கேரள மாநிலம், கொல்லத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும்  ரயில்கள் டிசம்பர் 4, 11-ஆம் தேதிகளில் ஈரோடுக்கு நள்ளிரவு 12.45 மணிக்கு வருகிறது. சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாகச் சென்னை செல்கிறது.
     இத்தகவலை ஈரோடு ரயில் நிலைய பயணச்சீட்டு விற்பனை மையங்களில் உள்ள அறிவிப்புப் பலகையில் தென்னக ரயில்வே ஒட்டியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai