Enable Javscript for better performance
ஈழப்போரில் உயிரிழந்த தமிழர்களுக்கு அஞ்சலி- Dinamani

சுடச்சுட

    

    இலங்கை ஈழப்போரில் உயிரிழந்த இலங்கைத் தமிழர்களுக்கு பவானிசாகரில் உள்ள அகதிகள் முகாமில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
     இலங்கையில் நடந்த ஈழப்போரில் ஏராளமானோர் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டனர். போரின்போது, கடல் வழியாக அகதிகளாகத் தப்பி வந்தவர்கள் பவானிசாகர் முகாமில் தங்கியுள்ளனர். இவர்கள் ஆண்டுதோறும் போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
     அதன்படி, பவானிசாகரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் போரில் உயிரிழந்த உறவினர்கள் படத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மெழுகுவர்த்தி ஏற்றி, அஞ்சலி செலுத்தினர்.
     இதில், நூற்றுக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியையொட்டி, சத்தியமங்கலம் டிஎஸ்பி பழனிசாமி தலைமையிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai