Enable Javscript for better performance
ஏற்காடு விரைவு ரயில் நேரத்தை மாற்ற வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    ஏற்காடு விரைவு ரயில் நேரத்தை மாற்ற வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 28th November 2016 06:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஏற்காடு விரைவு ரயில் இரவு 10 மணிக்கு புறப்படும் வகையில் நேரம் மாற்றம் செய்ய வேண்டும் என ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிகர் சங்கக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
     இதுதொடர்பாக, கூட்டமைப்பின் தலைவர் சிவநேசன், சேலம் கோட்ட ரயில்வே மேலாளருக்கு அனுப்பியுள்ள மனு:
     ஈரோட்டில் தற்சமயம் இயங்கிவரும் ரயில்வே சரக்கு முனையத்தில் இருந்து நாள்தோறும் 300-க்கும் மேற்பட்ட லாரிகள் பொருள்களை எடுத்துச் செல்லவும், இறக்கவும் இயக்கப்படுகின்றன. இந்த சரக்கு முனையத்தை பெருந்துறைக்கு மாற்றினால், கூடுதலாக லாரி வாடகை செலுத்த வேண்டி வரும். எனவே, சரக்கு முனையம் ஈரோட்டிலேயே தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     ஈரோடு - எழும்பூர் சிறப்பு ரயில் தொடர்ந்து இந்தத் தடத்தில் இயங்குவதற்கு வழி செய்ய வேண்டும். கோவை - ராமேசுவரம் ரயில் கொடுமுடியில் நின்று செல்லவும், கோவை - பெங்களூரு இடையே இரண்டடுக்கு ரயில் இயக்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம்.
     ஈரோடு ரயில் நிலையத்தில் நடைமேடை எண் இரண்டின் நீளத்தை நடைமேடை எண் ஒன்றுக்கு இணையாக மேற்குப் பகுதியில் நீட்டிக்க வேண்டும்.
     கொடுமுடி ரயில் நிலையத்தில் இரவு நேரங்களில் மின் தட்டுப்பாடு ஏற்படுகிறபோது நடைமேடைகளில் வெளிச்சம் தொடர்ந்து கிடைக்க, ஜென்ரேட்டரை நிறுவ வேண்டும்.
     கொடுமுடி ரயில் நிலைய இரண்டாவது நடைமேடையில் நிழற்குடை அமைக்க வேண்டும். புதுவை - மங்களூர் செல்லும் ரயில் புனித த்தலமான கொடுமுடி ரயில் நிலையத்தின் இரு வழிகளிலும் நின்று செல்ல அனுமதி வழங்க வேண்டும்.
     மேற்கு மண்டலத்தில் ரயில் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் கோவை - சீரடிக்கு நேரடி ரயில் இயக்க வேண்டும். ஏற்காடு விரைவு ரயில் புறப்படும் நேரத்தை இரவு 9-க்கு பதிலாக 10 மணி என மாற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai