Enable Javscript for better performance
செல்லிடப்பேசி பழுதுபார்த்தல் பயிற்சி டிசம்பர் 2-இல் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    செல்லிடப்பேசி பழுதுபார்த்தல் பயிற்சி டிசம்பர் 2-இல் தொடக்கம்

    By DIN  |   Published on : 28th November 2016 06:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கனரா வங்கி தொழில் பயிற்சி நிலையம் நடத்தும் இலவச செல்லிடப்பேசி பழுதுபார்த்தல் பயிற்சி முகாம் டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்குகிறது.
     ஈரோடு அசோகபுரம் (லட்சுமி தியேட்டர் அருகில்) ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா சிறுவர் பள்ளி வளாகத்தில் டிசம்பர் 2 முதல் 27-ஆம் தேதி வரை 21 நாள்கள் இப்பயிற்சி நடக்கிறது. இதில், இளைஞர்கள், பெண்கள், சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்.
     இப்பயிற்சி பெற குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 18 முதல் 45 வயது வரை இருக்கலாம். இப்பயிற்சி தினமும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை (ஞாயிறு தவிர) நடைபெறும். பயிற்சிக்கு கட்டணம் எதுவும் இல்லை. மதிய உணவு உள்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
     பயிற்சி பெற்றவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும். வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், விவரங்களுக்குப் பயிற்சி நிலைய   தொலைபேசி எண்ணைத் (0424-2290338) தொடர்பு கொள்ளலாம் என கனரா வங்கி முதுநிலை மேலாளர் மு.சுதர்சன் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai