Enable Javscript for better performance
திருட்டுச் சம்பவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு- Dinamani

சுடச்சுட

    

    திருட்டுச் சம்பவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

    By DIN  |   Published on : 28th November 2016 06:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருட்டுச் சம்பவம் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று காவல்துறை சார்பில் புன்செய் புளியம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.
     சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பு.புளியம்பட்டி நகராட்சி, அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த ஓராண்டாக கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக, பு.புளியம்பட்டி, டாணாபுதூர் பகுதிகளில் சத்தி டி.எஸ்.பி. பழனிசாமி தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரம்  விநியோகிக்கப்பட்டு வருகிறது.
     அதில், பொதுமக்கள் விலை உயர்ந்த பொருள்கள், நகை, பணம் உள்ளிட்டவற்றை வீட்டில் வைக்காமல் வங்கி லாக்கர்களில் வைக்க வேண்டும். வீட்டுக்கு அறிமுகம் இல்லாத நபர்கள் வந்தால் உள்ளே அனுமதிக்கக் கூடாது. வீட்டைப் பூட்டி விட்டு வெளியூர் செல்லும்பொது, பு.புளியம்பட்டி காவல் துறையின் தொலைபேசி எண்ணுக்கோ 04295-267035 அல்லது 94981-01245 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai