Enable Javscript for better performance
தேசிய அளவிலான கராத்தே போட்டி: வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பரிசு- Dinamani

சுடச்சுட

    

    தேசிய அளவிலான கராத்தே போட்டி: வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பரிசு

    By DIN  |   Published on : 28th November 2016 06:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள், வீராங்கனைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
     புத்தாஸ் வூ குங்ஃபு கராத்தே யோகா சிலம்பம் மார்ஷியல் ஆர்ட்ஸ் அறக்கட்டளை சார்பில் 6-ஆவது தேசிய அளவிலான குங்ஃபு போட்டிகள் ஈரோடு கொங்கு கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
     புத்தாஸ் குங்ஃபு அறக்கட்டளைத் தலைவர் நல்லகோவிந்தசாமி தலைமை வகித்தார். கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தாளாளர் டி.என்.சென்னியப்பன், தமிழ்நாடு அனைத்து தற்காப்புக் கலைச் சங்கத் தலைவர் ஏ.அப்துல்அஜீஸ் ஆகியோர் போட்டிகளைத் தொடக்கி வைத்தனர்.
     20 வயதுக்குள்பட்டோர் பிரிவு, 21 முதல் 25 வயதுக்குள்பட்டோர் பிரிவு, 26 முதல் 30 வயதுக்குள்பட்டோர் பிரிவு உள்பட 17 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த வீரர்கள், வீராங்கனைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
     பரிசளிப்பு விழாவுக்கு, போட்டி ஒருங்கிணைப்பாளர் ஆர்.கந்தவேல் தலைமை வகித்தார். ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவகுமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பரிசுகளை வழங்கினார். அதிக புள்ளிகள் பெற்ற கவுந்தப்பாடி சரஸ்வதி வித்யாலயா பள்ளி, கோவை மாவட்டம் பல்லடம் அன்னை அறிவகம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ரஹ்மத் அணி வீரர்கள் ஆகியவற்றுக்கு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது.
     விழாவில், போட்டி ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் சித்ரா கந்தவேல், எஸ்.ஏ.பூபதி, கே.சிவசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai