Enable Javscript for better performance
பின்னலாடை நிறுவன ஜெனரேட்டர் அறையில் தீ- Dinamani

சுடச்சுட

    

    பெருந்துறை அருகே பின்னலாடை நிறுவன ஜெனரேட்டர் அறையில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.
     பெருந்துறையை அடுத்த சத்திரம்புதூரில் தனியார் பின்னலாடை நிறுவனம் உள்ளது. அங்கு, ஜெனரேட்டர் அறையில் டீசல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் கொட்டி வைக்கப்பட்டிருந்த கழிவுத் துணிகளில் சனிக்கிழமை மாலை திடீரென தீப்பிடித்தது.
     இதுகுறித்து தகவலறிந்த பெருந்துறை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai