Enable Javscript for better performance
விவசாயி மீது தாக்குதல்: உதவி ஆய்வாளரை கண்டித்து மதிமுகவினர் மறியல்- Dinamani

சுடச்சுட

    

    விவசாயி மீது தாக்குதல்: உதவி ஆய்வாளரை கண்டித்து மதிமுகவினர் மறியல்

    By DIN  |   Published on : 28th November 2016 06:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சத்தியமங்கலம் அருகே விவசாயி மீது தாக்குதல் நடத்திய உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அரசூரில் மதிமுக, விவசாயிகள் சாலை மறியலில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.
     சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அரசூரில் கடம்பூர் உதவி ஆய்வாளர் பழனிசாமி, போலீஸார் வாகனத் தணிக்கையில் சனிக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோபியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்த விவசாயி நடராஜ் என்பவரின் காரை நிறுத்தி போலீஸார் சோதனையிட்டனர்.
     அப்போது, காரின் முகப்பு விளக்கை டிம் செய்யாமல் வந்தது குறித்து உதவி ஆய்வாளர் கேள்வி கேட்டுள்ளார். இதையடுத்து, இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறில் நடராஜை, உதவி ஆய்வாளர் பழனிசாமி தாக்கியதாகக் கூறப்படுகிறது.
     இதில், காயமடைந்த விவசாயி நடராஜ் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், உதவி ஆய்வாளர் மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அரசூரில் மதிமுக மற்றும் விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  தகவலறிந்த போலீஸார் அப்பகுதிக்கு விரைந்து சென்று விவசாயிகளை சமாதானப்படுத்தினர். இதுகுறித்து, மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளதாகவும், அவர் மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் உறுதி அளித்ததையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai