Enable Javscript for better performance
அங்கீகாரம் இல்லாத பள்ளியில் மாணவர் சேர்க்கை கூடாதுமுதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    அங்கீகாரம் இல்லாத பள்ளியில் மாணவர் சேர்க்கை கூடாது முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை

    By DIN  |   Published on : 08th October 2016 05:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் மாணவர் சேர்கைக செய்ய வேண்டாம் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் எச்சரிக்கை செய்துள்ளார்.
    இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை விடுத்த செய்தி:
    ஈரோடு பவானிசாகர் ஒன்றியம் தொட்டம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பண்ணாரியம்மன் திருமண மண்டபத்தில் பள்ளிக்கல்வித்துறையின் அங்கீகாரம் இல்லாமலும், பள்ளிக்கான அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் செயல்பட்டு வந்த ஸ்ரீ கிரி வித்யாலயா இண்டர்நேசனல் பள்ளி உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்து வந்ததையடுத்து ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளிக்கு சீல் வைத்தார்.
    இந்நிலையில் சீல் வைக்கப்பட்ட பள்ளியின் சார்பில் விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருவதாக புகார் வந்துள்ளதையடுத்து பள்ளிக்கல்வித்துறை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் கிரி வித்யாலயா இண்டர்நேசனல் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு கருதி சேர்க்க வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai