Enable Javscript for better performance
அஞ்சல் நிலையம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    பவானியில், தலைமை அஞ்சல் நிலையத்தை எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து, தமிழகத்துக்கு துரோகம் இழைப்பதாகக் கூறி, மத்திய அரசைக் கண்டித்து இப்போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு இக்கட்சியின் பவானி சட்டப் பேரவைத் தொகுதித் தலைவர் முஹம்மது அகில் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் முஹம்மது யூனுஸ் முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.   இது தொடர்பாக கட்சியின் தொகுதிச் செயலர் ஜனதுல் உள்பட 9 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai