Enable Javscript for better performance
கார் கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பெருந்துறை அருகே, சாலையோரப் பள்ளத்தில் கார் கவிழ்ந்து  பெண் ஊழியர் உயிரிழந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கார் ஓட்டுநர் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.
     திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்துவரும் ஊழியர்கள் சிலர், அக்டோபர் 10 -ஆம் தேதி அந்நிறுவனத்தில் நடந்த சரஸ்வதி பூஜையில் பங்கேற்றுவிட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். பெருந்துறையை அடுத்த திங்களூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் இந்த காரை ஓட்டிவந்தார். அதில்,  நந்தினி, சந்திரன், மாலதி, பூபதி, தமிழரசு ஆகியோர் பயணித்தனர்.  இந்நிலையில், பெருந்துறையை அடுத்த கள்ளியம்புதூர் பிரிவு அருகே சென்றுகொண்டிருந்தபோது, இந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.
    இதில், சம்பவ இடத்திலேயே நல்லாம்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகள் நந்தினி உயிரிழந்தார். பலத்த காயமடைந்த கார் ஓட்டுநர் பாலசுப்பிரமணியம், பூபதி, தமிழரசு ஆகியோர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, பாலசுப்பிரமணியம் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.
     இதுகுறித்து பெருந்துறை காவல் ஆய்வாளர் சிவகுமார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai