Enable Javscript for better performance
கிணற்று மோட்டாரில் சேலை சிக்கி மூதாட்டி சாவு- Dinamani

சுடச்சுட

    

    கோபியில், தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சியபோது, கிணற்று மோட்டாரில் சேலை சிக்கி மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.
     கோபி அருகே வேட்டைக்காரன்கோவில் கிழக்குகரடுப் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி சின்ன அம்மணி (62). ராமசாமி சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில், சின்னஅம்மணி அந்தப் பகுதியில், விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்துவந்தார். அவர், தோட்டத்தில் மஞ்சள் சாகுபடி செய்திருந்தார்.
     இந்நிலையில், தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த
    சின்ன அம்மணி, கிணற்று மோட்டாரின் இயக்கத்தை நிறுத்துவதற்காகச் சென்றபோது, அவரது சேலை மோட்டார் மின்விசிறியில் சிக்கி, நிலை தடுமாறி மின் மோட்டார் மீது விழுந்தார். வயிற்றில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர், வியாழக்கிழமை உயிரிழந்தார்.
     இது குறித்து கோபி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai