Enable Javscript for better performance
குடிசையில் தீ: கார், வீட்டு உபயோகப் பொருள்கள் சேதம்- Dinamani

சுடச்சுட

    

    ஈரோடு அருகே திண்டலில் குடிசை வீட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் கார், இருசக்கர வாகனம், வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து சேதமாகின.
     ஈரோடு அருகே திண்டல் காரப்பாறை புதுக் காலனியைச் சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களது மகள் சுமதி. இவர், தனது கணவர் சக்திவேலுடன் அருகே உள்ள குடிசையில் வசித்து வருகிறார்.
     இந்நிலையில், வெள்ளிக்கிழமை மதியம் அருணாசலத்தின் குடிசையில் தீப்பிடித்தது. இது குறித்து தகவல் கிடைத்ததும் ஈரோடு தீயணைப்பு நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையிலான தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தனர்.
     இருப்பினும், வீட்டின் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம், வீட்டில் இருந்த பீரோ, கட்டில் ஆகியவை தீவிபத்தில் சேதமாகின. தீ விபத்தின்போது, சமையல் எரிவாயு உருளை வெடித்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சக்திவேலின் வேன் தீயில் கருகியது.
     இது குறித்து ஈரோடு தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai