Enable Javscript for better performance
கைத்தறி ரகத்தை விசைத்தறியில் நெசவு செய்தால் சிறை தண்டனை: முதன்மை அமலாக்க அலுவலர்- Dinamani

சுடச்சுட

    

    கைத்தறி ரகத்தை விசைத்தறியில் நெசவு செய்தால் சிறை தண்டனை: முதன்மை அமலாக்க அலுவலர்

    By DIN  |   Published on : 15th October 2016 08:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கைத்தறிக்கு என ஒதுக்கீடு செய்துள்ள ரகத்தினை, விசைத்தறியில் நெசவு செய்தால் 6 மாதம் சிறை தண்டனை விதிகப்படும் என்று முதன்மை அமலாக்க அலுவலர் சுரேஷ்சந்ரா பேசினார்.
     கைத்தறி ரக ஒதுக்கீட்டுச் சட்ட அமலாக்கப் பிரிவின் சார்பில், விசைத்தறி உரிமையாளர்கள், விசைத்தறி துணி உற்பத்தியாளர்களுக்கு, கைத்தறி ரக ஒதுக்கீட்டுச் சட்டம் 1985 தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் சென்னிமலை சென்டெக்ஸ் கைத்தறி நெசவாளர்கள் சங்கக் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
     சென்னை மண்டல அமலாக்க அலுவலர் ஆதிநாராயணன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக புதுதில்லி, முதன்மை  அமலாக்க அலுவலர் சுரேஷ்சந்ரா பங்கேற்றுப் பேசியதாவது:
     மத்திய அரசால் கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட ரகங்களான வேஷ்டி, சேலை, துண்டு, அங்கவஸ்திரம், லுங்கி, பெட்ஷீட், ஜமக்காளம், டிரஸ் மெட்டிரியல், கம்பளி, சால்வை, உல்லன் ட்வீட் ஆகிய ரகங்களை, விசைத்தறியில்  உற்பத்தி செய்தால், விசைத்தறி உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய ரகங்களை வாங்கி விற்பனை செய்வதும், கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டப் பிரிவு 7-ன்படி  தண்டனைக்குரிய குற்றம் ஆகும். விசைத்தறியாளர்கள், அதிகக் கூலி கிடைக்கும் என கைத்தறி ரகங்களை விசைத்தறியில் நெய்து கொடுப்பது தண்டணைக்குரிய குற்றமாகும். கைத்தறி ரகத்தினை விசைத்தறியில் உற்பத்தி செய்தால் காவல் நிலையத்தில்  புகார் மனு கொடுக்கப்படும். மேலும், நீதி  மன்றத்தின் மூலம் விசைத்தறிக்கு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனை பெற்றுத் தரப்படும் என்று தெரிவித்தார்.   விசைத்தறியாளர்கள் எவரேனும், கைத்தறிக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்ட ரகத்தினை உற்பத்தி செய்தால், ஈரோடு சூரம்பட்டியில் இயங்கி வரும் உதவி அமலாக்க அலுவலகத்தினை நேரடியாகத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அல்லது 2275142 என்ற தொலைபேசி எண்ணுக்கும் புகார் தெரிவிக்கலாம் என்றார்.
      சேலம் நெசவாளர் சேவை மைய துணை இயக்குநர் வாசு, அமலாக்க ஆய்வாளர்கள் தேன்மொழிபிரியா, அனிதா, நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர். உதவி அமலாக்க அலுவலர் தங்கராஜ் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai