Enable Javscript for better performance
சட்ட விதிகளை மீறி குழந்தைகளை தத்து கொடுக்கக் கூடாது: ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    சட்ட விதிகளை மீறி குழந்தைகளை தத்து கொடுக்கக் கூடாது: ஆட்சியர்

    By DIN  |   Published on : 15th October 2016 08:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சட்ட விதிகளை மீறி, அரசு மற்றும் தனியார் மருத்துவனைகளில் குழந்தைகளைத் தத்து  கொடுக்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.
     இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:
     ஈரோடு மாவட்டத்தில், சட்டத்துக்குப் புறம்பாக குழந்தைகளை தத்தெடுத்தல் மற்றும் தத்து கொடுத்தலைத் தவிர்க்கும் வகையில் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் 18 வயதுக்கு உள்பட்ட பெண் குழந்தைகள், மகப்பேறு சம்பந்தமாக அனுமதிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக மாவட்ட நிர்வாகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் குழந்தைகள் நலக் குழுவுக்குத் தெரிவிக்க வேண்டும்.
     மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளைத் தத்தெடுத்தல் என்பது சட்டத்துக்குப் புறம்பாக நடைபெறக் கூடாது. குழந்தையைத் தத்து கொடுத்தல் இளைஞர் நீதிசட்டம் 2015-ன்படி மத்திய
    குழந்தைகள் தத்தெடுப்பு வள நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படியே நடைபெற வேண்டும்.
     மருத்துவமனைகளில், கைவிடப்பட்ட குழந்தைகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்டக் குழந்தைகள் நலக் குழுவுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
    எனவே, ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இந்த விதிமுறைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai