Enable Javscript for better performance
செல்லிடப்பேசி கடையில் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    ஈரோட்டில், பிரபல செல்லிடப்பேசி கடையில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்லிடப்பேசிகள் திருடுபோனயின.
     ஈரோடு, காந்திஜி சாலையில் வருமான வரி அலுவலகம் அருகே பிரபல செல்லிடப்பேசிக் கடை உள்ளது. இக்கடையில், 17 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இக்கடையை வழக்கம்போல் வியாழக்கிழமை இரவு பூட்டிவிட்டுச் சென்றனர். அடுத்தநாள் வெள்ளிக்கிழமை காலை வந்துபார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
      கடைக்குள் சென்று பார்த்தபோது, 100-க்கும் மேற்பட்ட செல்லிடப்பேசிகள், கல்லா பெட்டியில் இருந்த ரூ. 51 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. இக்கடைக்கு உள்ளேயும், வெளியேயும் பொருத்தப்பட்டுள்ள
    12 கண்காணிப்பு கேமராகளில் பதிவான காட்சிகளைப் பார்த்தபோது, வியாழக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் 3 மர்ம நபர்கள் திருடும் காட்சி பதிவாகியுள்ளது.
     பூட்டை உடைக்காமல், கள்ளச்சாவி மூலம் பூட்டைத் திறந்து செல்லிடப்பேசிகளை திருடிய பின்னர், கல்லாப் பெட்டியைத் திறந்து பணத்தைத் திருடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. சம்பவ இடத்தில், ஈரோடு குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் மோகன், ஆய்வாளர் முருகன் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் காந்திஜி சாலையில் நடைபெற்ற இத்திருட்டு சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai