Enable Javscript for better performance
நாளை வீட்டு உபயோக பொருள்கள் பழுது நீக்கும் இலவச முகாம்- Dinamani

சுடச்சுட

    

    நாளை வீட்டு உபயோக பொருள்கள் பழுது நீக்கும் இலவச முகாம்

    By DIN  |   Published on : 15th October 2016 08:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி சார்பில் வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது நீக்கும் இலவச முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
     இக்கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில் ஈரோடு செங்குந்தர் மழலையர், தொடக்கப் பள்ளி வளாகத்தில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை இம்முகாம் நடைபெறும்.
    மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி, செல்லிடப்பேசி, தொலைக்காட்சிப் பெட்டி, சலவைப் பெட்டி உள்ளிட்டவை இலவசமாக பழுதுநீக்கித் தரப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரிச் செயலர் எஸ்.சிவானந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai