Enable Javscript for better performance
நிலத் தரகர்கள் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    ஊராட்சி அனுமதிபெற்ற வீட்டுமனைகளை விற்பனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க, மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி இந்திய தேசிய ரியல் எஸ்டேட், பில்டர்ஸ் லேன்ட் டெவலப்பர்ஸ் நிலத் தரகர்கள் நலச் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     ஈரோடு, காளைமாட்டுச்சிலை அருகே நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். ஈரோடு மாவட்ட அமைப்பாளர் எஸ்.வடிவேல் முன்னிலை வகித்தார்.
     இதில், நிர்வாகிகள் பேசும்போது, ஊராட்சி அனுமதிபெற்ற வீட்டுமனை களைப் பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், வீட்டு மனை வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தத் தடையை நீதிமன்றம் மூலமாக நீக்க, மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai