Enable Javscript for better performance
நீர்நிலைகளைத் தூர்வார ஆட்சியர் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    உள்ளாட்சி அமைப்புகள் உடனடியாக நீர்நிலைகளைத் தூர்வார வேண்டும் என்று ஆட்சியர் எஸ்.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.
     ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணைக் குழுக் கூட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மை கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
     இதில் ஆட்சியர் எஸ்.பிரபாகர் பேசியதாவது:
     வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடு நடவடிக்கையாக நீர்நிலைகள், நீர் வரத்துக் கால்வாய்கள், வெள்ளநீர் வடிகால்கள் ஆகியவற்றில் காணப்படும் செடி, கொடி, முள்புதர்களை அகற்றி மழைநீர் தங்குதடையின்றி வடிந்து செல்லும் வகையில் தூர்வாரும் நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகள் உடனடியாக  மேற்கொள்ள வேண்டும்.
     பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை மீள்நிரப்புக் கிணறுகளாக மாற்றுவதற்கும், நீர் நிலைகளில் மீள் நிரப்புக் குழிகள் அமைப்பதற்கும்  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
     ஊராட்சி ஒன்றிய அளவில் துணை ஆட்சியர் நிலையில், பேரிடர் மேலாண்மைப் பணிகள் ஒருங்கிணைப்பு அலுவலர் நியமனம்
    செய்யப்பட்டுள்ளார். ஊராட்சி ஒன்றிய அளவில் நீர்நிலைகள், நீர்வரத்து ஆதாரங்கள் ஆகியவற்றினை ஆய்வு செய்து மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து துணை ஆட்சியர் தலைமையிலான குழு வாராந்திர அறிக்கை அளிக்க வேண்டும் என்றார்.
     மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதீஸ்,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் சீனிவாசன், மாநகராட்சி ஆணையர் சீனி அஜ்மல்கான், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பெ.மேனகா உள்பட பலர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai