Enable Javscript for better performance
மழை வேண்டி பண்ணாரி அம்மன் கோயிலில் யாகம்- Dinamani

சுடச்சுட

    

    மழை பெய்ய வேண்டி, இந்து அறநிலையத் துறை சார்பில்  பண்ணாரி அம்மன் கோயிலில் யாக பூஜை, சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை  நடைபெற்றன.
     சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோயிலில், வருண பகவான் அருள் கிடைக்கவும், மழை பெய்ய வேண்டியும், இந்து அறநிலையத் துறை சார்பில் யாக பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி, கோயிலில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்துவரப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. சிவசுப்பிரமணியம் சிவாச்சாரியார் தலைமையில் 10 வேத விற்பன்னர்கள், விநாயகர் வழிபாடு, வருண ஜப ஹோமம், 1,008 ஜபம் செய்து, மஹா அபிஷேக ஆராதனைகளை நடத்தினர்.
     அதனைத் தொடர்ந்து, மாதேஸ்வரர், நந்தீஸ்வரர் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜையும், மழை வேண்டி பண்ணாரி அம்மனுக்கு புனிதநீர் ஊற்றி, மஹா தீபாரதனையும் நடைபெற்றது.
    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai