Enable Javscript for better performance
மாணவி மாயம்- Dinamani

சுடச்சுட

    

    சென்னிமலை அருகே, பள்ளி மாணவியை காணவில்லை என்று அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்  சென்னிமலையை அடுத்த முகாசிபிடாரியூர், காமராஜ் நகரைச் சேர்ந்தவர் ராகவன். இவரது 16 வயது மகள், அங்குள்ள பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
     இந்நிலையில், ராகவன் தன் மனைவியுடன் கடந்த செப்டம்பர்  27-ஆம் தேதி வெளியே சென்றிருந்தார். அப்போது, வீட்டில் அவரது மகள் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், ராகவன் வீடு திரும்பியபோது, அவரது மகளைக் காணவில்லை. இது தொடர்பாக சென்னிலை காவல் நிலையத்தில் ராகவன் வெள்ளிக்கிழமை புகார் செய்தார்.
     இதுகுறித்து காவல் ஆய்வாளர் வெங்கடாசலம் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai