Enable Javscript for better performance
"வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம்'- Dinamani

சுடச்சுட

    

    "வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம்'

    By DIN  |   Published on : 15th October 2016 08:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துக்கொள்ள விரும்புவோர், பொதுப் பணித் துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
     இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:
     சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஈரோடு, சூரம்பட்டி அணைக்கட்டின் நீர்ப்பரப்புப் பகுதியில் உள்ள வண்டல் மண்ணை தூர்வாரிச் சீரமைக்கத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வண்டல் மண்ணை தூர்வாரும் பணி குறித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
     வண்டல் மண் கோரும் விவசாயிகள், பொதுமக்கள் கீழ்பவானி  வடிநிலக் கோட்டப் செயற்பொறியாளளிடம் மனு அளித்து, இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொருவரும் 5 லோடு, லாரியில் ( 30 கன அடி) வண்டல் மண் எடுத்து, தங்களது உபயோகத்துக்குப் பயன்படுத்தி கொள்ளலாம். கூடுதலாக வண்டல் மண் தேவைப்படுவோர் மீண்டும் மனு கொடுக்கலாம்.
     மனுவை, நேரடியாக சூரம்பட்டி அணைக்கட்டு தளத்தில் உள்ள பொதுப் பணித் துறை பொறுப்பு அலுவலரிடம் கொடுத்து, உடனடியாக அனுமதி பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai