Enable Javscript for better performance
விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    பெருந்துறை அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
     பெருந்துறையை அடுத்த கவுண்டச்சிபாளையம் ஊராட்சி கணபதி நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் (56). இவர் விவசாயி. இவரது உறவினர் ஒருவர் இறந்துவிட்டதால், துக்கம் விசாரிப்பதற்காக தங்கராஜ் தனது குடும்பத்தாருடன் வியாழக்கிழமை சென்றிருந்தார்.
    அதன்பின்னர் மாலை வீடு திரும்பிய அவர்கள், வீட்டு முன்புறக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 8 பவுன் நகைகள், 15 ஆயிரம் ரொக்கம், வீட்டுப் பொருள்கள்  திருபோனது தெரியவந்தது.
     இதுகுறித்து  வெள்ளோடு காவல் உதவி ஆய்வாளர் துரைசாமி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai