சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ், தொடக்க கல்வி தனித் தேர்வர்களுக்கான பட்டயத் தேர்வுகள் ஜூன் 28 முதல் ஜூலை 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தனித் தேர்வர்களாக முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வெழுத நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதியான மே 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறியவர்கள், தற்போது சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ், விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின்கீழ், தேர்வெழுத விரும்பும் தனித் தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தை பக்கம் 1 முதல் 3 வரையுள்ள அறிவுரைகளைப் பதிவிறக்கம் செய்து கொண்டு தேர்வரின் தகுதி, அறிவுரைகளைப் பின்பற்றி பூர்த்தி செய்ய வேண்டும்.
அந்த விண்ணப்பத்துடன் ஏற்கெனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் நகலை கண்டிப்பாக இணைத்து பெருந்துறை மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனத்தின் மூலம் வெள்ளிக்கிழமை (ஜூன் 9), சனிக்கிழமை (ஜூன் 10) ஆகிய இரு நாள்களில் தேர்வரே நேரில் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். அங்கேயே தேர்வுக் கட்டணம் செலுத்தலாம்.
ஒவ்வொரு பாடத்துக்கும் தலா ரூ. 50, பதிவுக் கட்டணம் ரூ. 10, மதிப்பெண் சான்றிதழ் கட்டணமாக முதலாம் ஆண்டுக்கு கட்டணம் ரூ. 100-ம், இரண்டாம் ஆண்டுக்கு ரூ. 100-ம், சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ. 1,000-ம், சேவைக் கட்டணமாக ரூ. 5-ம், ஆன்லைன் பதிவுக் கட்டணமாக ரூ. 50-ம் செலுத்த வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூன் 10-ஆம் தேதி என மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்லூரி முதல்வர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.