கோபியை அடுத்த கவுந்தப்பாடி தங்கமேடு பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட மதுக் கடையை மூடக் கோரி கிராம மக்கள் பள்ளிக் குழந்தைகளுடன் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கவுந்தப்பாடி உப்புக்காரப்பள்ளத்தில் செயல்பட்டு வந்த மதுக் கடை மூடப்பட்டு தற்போது, தங்கமேடு பகுதியில் செயல்பட்டு வருகிறது. இக்கடையை மூடக் கோரி தங்கமேடு தம்பிக்கலை அய்யன்கோயில், கொட்டாப்புளிமேடு, பேராயூர், ஈச்சரமேடு உள்பட 7-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பள்ளிக் குழந்தைகளுடன் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த கவுந்தப்பாடி காவல் துறையினர், டாஸ்மாக் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்தையில் ஈடுபட்டனர். அதில், தங்கமேடு பகுதியில் செயல்பட்டு வரும் மதுக் கடை விரைவில் அகற்றப்படும் என்று உறுதியளித்தனர். மேலும், அக்கடையில் இருந்த மது பாட்டில்களை எடுத்துச் செல்லப்பட்டதை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.