வேளாண் திட்டத்தின்கீழ் 1,000 விவசாயிகளுக்குப் பயிற்சி

நீடித்த நிலையான மானாவாரி வேளாண் இயக்கத் திட்டத்தின்கீழ் 1,000 விவசாயிகளுக்குப் பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக ஈரோடு மாவட்ட
Updated on
1 min read

நீடித்த நிலையான மானாவாரி வேளாண் இயக்கத் திட்டத்தின்கீழ் 1,000 விவசாயிகளுக்குப் பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சு.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மழை நீரை மட்டுமே நம்பி விவசாயம் செய்யும் மானாவாரி விவசாயிகள் பயன்பெருகிற வகையில் மானாவாரி விவசாயத்தில் சிறு தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துப் பயிர்களின் சாகுபடியையும், உற்பத்தியையும் அதிகரித்து விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க செய்யும் வகையில் நீடித்த மானாவாரி வேளாண்மைக்கான இயக்கம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் 2016-17-ஆம் ஆண்டு முதல் 2019-20-ஆம் ஆண்டு வரை நான்கு ஆண்டுகள் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. நடப்பு ஆண்டில் மானாவாரி பகுதிகளை உள்ளடக்கிய 6 தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அதில், தொகுப்பு மேம்பாட்டுக் குழுக்கள், உழவர் மன்றக் குழுக்கள், போன்றவை உருவாக்கப்பட்டு விவசாயிகளின் ஆலோசனைப்படி, செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டம் வேளாண் துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, கால்நடைத் துறை, கூட்டுறவுத் துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து விவசாயிகள் பயன்பெறும் நோக்கில் செயல்படுத்தப்பட உள்ளது.
இதில், பயிர் உற்பத்தி செயல் விளக்கத் திடல் அமைத்தல், பண்ணை இயந்திரங்கள் வாங்க மானியம், பண்ணைக் குட்டைகள், தடுப்பணைகள் அமைத்தல், தெளிப்பு நீர்ப் பாசனக் கருவிகள் உள்ளிட்டவை வழங்க உள்ளன.
மானாவாரி விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தை முழுமையாக அறிந்து கொள்ளும் நோக்கிலும், புதிய வேளாண்மை தொழில்நுட்ப உத்திகளை அறிந்து கொள்ளும் விதமாகவும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1,000 மானாவாரி விவசாயிகளுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com