ஈரோடு-பெருந்துறை சாலையில் உள்ள பரிமளம் மஹாலில் ஜூன் 17-ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்மிக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த ஆன்மிக நிகழ்ச்சி மற்றும் லட்சுமி ஹோம பூஜையில் இலவச அனுமதியுடன் அனைவரும் பங்கேற்கலாம். காலையில், 12 ராசிகளுக்குமான பொதுப் பலன்களை வழிகாட்டி ஜோதிடர் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் கணித்து சொல்வதுடன், ஈரோட்டின் சிறப்புகள் கூறும் தல வரலாறு மற்றும் பொது மக்களின் ஐயங்களுக்கான விளக்கங்களையும் அளிக்க உள்ளார்.
பிற்பகலில், நிவர்த்தி மற்றும் பரிகாரங்கள் குறித்து விவரிப்பதுடன் லட்சுமி ஹோம பூஜையை ஜோதிடர் கண்ணன் பட்டாச்சார்யா நடத்துகிறார். மாதந்தோறும் நகரவாரியாக நடத்தப்படும் இந்நிகழ்ச்சி, திருவண்ணாமலை, திருச்செங்கோடு, திருநெல்வேலி, கடலூர், கும்பகோணம், சிவகங்கை, மதுரை ஆகிய நகரங்களைத் தொடர்ந்து தற்போது ஈரோட்டில் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.