பெருந்துறையில் ரூ. 1.14 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 1 கோடியே 14 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 1 கோடியே 14 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் 2,936 மூட்டைகளில், 1,42,000 கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில், முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 79.35-க்கும், அதிகபட்சமாக ரூ. 85.70-க்கும் விற்பனையானது. இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 45.50-க்கும், அதிகபட்சமாக ரூ. 76.75-க்கும்  விற்பனையானது.
மொத்தம், ரூ. 1 கோடியே 14 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றதாக சங்கத் தலைவர் அருள்ஜோதி கே.செல்வராஜ் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com