தாளவாடி வனப் பகுதியில் மணல் அள்ளியதாக டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இச்செயலில் ஈடுபட்டதாக விவசாயிக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூர் புலிகள் காப்பகத்தில் உள்ள திகினாரை காப்புக்காட்டில் மணல் திருடப்படுவதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, வனத் துறை அலுவலர் சிவகுமார் மற்றும் வனத் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அபோது திகினாரை பள்ளத்தில் அதே பகுதியைச் சேர்ந்த மாதவன் டிராக்டரில் மணல் அள்ளியது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, மணல் அள்ளப் பயன்படுத்தப்பட்ட டிராக்டரை வனத் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், அவருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.