ஈரோட்டில் தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில கெளரவ பொதுச் செயலாளர் குப்புசாமி தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் செல்லமுத்து, இணைச் செயலாளர் காமராஜ்பாண்டியன், மாவட்டச் செயலாளர் மேசப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நிர்வாகிகள் பேசியதாவது:
ஈரோடு மாவட்ட கூட்டுறவு துறை அதிகாரிகளும், மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகளும் எவ்வித உத்தரவும் இல்லாமல் தொடக்கக் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளைப் பாதிக்கக்கூடிய வகையில் அத்துமீறி கள ஆய்வு என்ற பெயரில் பல நாள்களாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல, நியாயவிலைக் கடைகளில் 100 சதவீதம் ஆய்வு என்ற பெயரில் ஆய்வு நடத்தப்படுவதால் பொதுமக்களுக்கு நியாயவிலைப் பொருள்கள் முறையாக வழங்க முடியவில்லை. பணியாளர்களைப் பழிவாங்கும் நோக்கத்தில், கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தாங்களாகவே ஒழுங்கு நடவடிக்கை கடிதங்களை தயார் செய்து அனுப்புகின்றனர்.
எனவே, இதுபோன்ற செயல்பாடுகளை நிறுத்தக் கோரி, மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் அலுவலகங்களையும், நியாயவிலைக் கடைகளையும் அடைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.