எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு: மூன்றாண்டு சாதனையைதக்கவைக்குமா ஈரோடு மாவட்டம்?

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 19) வெளியாகவுள்ள நிலையில், ஒட்டுமொத்தத் தேர்ச்சியில் கடந்த 3 ஆண்டுகளாக முதலிடம் பிடித்து
Updated on
1 min read

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 19) வெளியாகவுள்ள நிலையில், ஒட்டுமொத்தத் தேர்ச்சியில் கடந்த 3 ஆண்டுகளாக முதலிடம் பிடித்து வரும் ஈரோடு மாவட்டம், நடப்பாண்டும் இச்சாதனையை தக்கவைத்துக் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு கல்வியாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு கடந்த மார்ச் 8-இல் தொடங்கி மார்ச் 28-ஆம் தேதி வரை நடைபெற்றது. ஈரோடு, கோபி ஆகிய 2 கல்வி மாவட்டங்களைக் கொண்ட ஈரோடு வருவாய் மாவட்டத்தில், 355 பள்ளிகளைச் சேர்ந்த 13 ஆயிரத்து 764 மாணவர்கள், 13 ஆயிரத்து 527 மாணவிகள் என 27 ஆயிரத்து 291 பேர், தனித் தேர்வர்களாக 1,311 பேர் தேர்வு எழுதினர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் போலவே, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி, தேர்வு தொடங்குவதற்கு முன்பாகவே அறிவிக்கப்பட்டது. அறிவித்தபடி  வெள்ளிக்கிழமை (மே 19) எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.
ஈரோடு மாவட்டம், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக முதலிடத்தைத் தக்க வைத்துக்கொண்டு வருகிறது. 2014-இல் 97.08 சதவீதமும், 2015-இல் 98.04 சதவீதமும், 2016-இல் 98.48 சதவீதமும் தேர்ச்சி பெற்றதோடு, தொடர்ந்து தேர்ச்சி விகிதம் அதிகரித்தது. தொடர்ந்து 3 ஆண்டுகளாக முதலிடத்தைத்  தக்கவைத்து சாதனை படைத்து வருகிறது.  அதேபோல் நடப்பு ஆண்டும் இச்சாதனையை ஈரோடு மாவட்டம் தக்கவைத்துக் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு கல்வியாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com