பவானிசாகர் மீன்துறையில் மேற்பார்வையாளர் பணி: ஜூன் 12-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

மீன்வளத் துறையில் மேற்பார்வையாளர் பணிக்கு தகுதியுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
Published on
Updated on
1 min read

மீன்வளத் துறையில் மேற்பார்வையாளர் பணிக்கு தகுதியுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மீன்வளத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பவானிசாகர் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாகவுள்ள மீன்வள மேற்பார்வையாளர் தரம் 2 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இன சுழற்சி அடிப்படையில் ஆதிதிராவிடர் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர்) விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 18 வயது முதல் 35 வரை வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நீச்சல் தெரிந்திருப்பதோடு, மீன்பிடிக்கவும், மீன்பிடி வலைகள் மற்றும் அறுந்த வலைகளை பழுது நீக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மீன்துறையின் கீழுள்ள ஏதேனும் ஒரு மீனவர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி மேற்கொண்டமைக்கான சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் தங்களது பெயர், தந்தை, கணவர் பெயர், பாலினம், பிறந்த தேதி, தாற்காலிக மற்றும் நிரந்தர முகவரி, கல்வித் தகுதி, சிறப்பு தகுதி, ஜாதி, ஜாதியில் முன்னுரிமை விவரம், வேலைவாய்ப்பு அட்டை பதிவு விவரம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை விவரம் மற்றும் அனுபவ விவரம் போன்ற விவரங்களை ஒரு வெள்ளைத்தாளில் பதிவு செய்து அனுப்ப வேண்டும்.
மேற்கண்ட பதிவுகளை உறுதிப்படுத்தும் வகையில் உரிய ஆவணங்களின் நகல்களையும், 2 பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படங்களையும் இணைத்து மீன்வள உதவி இயக்குநர், மீன்வள உதவி இயக்குநர் அலுவலகம், அணை சாலை, புங்கார், பவானிசாகர்-638 451, ஈரோடு மாவட்டம் என்ற முகவரிக்கு  ஜூன் 12-ஆம்  தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பம் கிடைக்கும் வகையில் பதிவு அஞ்சல் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். உரிய காலத்துக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com